Udayar #1 – A Review

உடையார் #1 [Udayar] by Balakumaran
My rating: 3 of 5 stars

Udayar is Tamil novel written by Balakumaran. It is written in six volumes. The story’s first part was published in a weekly Tamil magazine and then published in monthly novels (Palsuvai novel, Ladies novel). Subsequently 5 volumes were published as books by Thirumagal Nilayam. Udayar is a south Indian title. This novel deals with the building of the Tanjore Temple, depicting in detail the mindset of the people, Rajaraja chola’s courtiers and relatives. It also throws some light on the significance of the various innovations that were done during the building of the temple.

காரணம் தெரியவில்லை ஆனால் எனக்கு இந்த முதல் பாகம் அவ்வளவாக பிடிக்கவில்லை.

கோவில் கட்டுவது பற்றிய புத்தகம் என்றால் கடவுள், மதம், மாய மந்திரம் போன்ற விஷயங்கள் பற்றிய பேச்சு இருக்கத்தான் செய்யும். அதனால் அதில் ஆர்வம் இல்லை என்றாலும் நான் பெரிதாக அதைக் கண்டு கொள்ள வில்லை.

அந்தக் காலம் என்றால் பெண்ணடிமைத்தனம் இருக்கும். பலகுமாரனே அவருடைய முன்னோட்டத்தில்:

“பெண்ணடிமைத்தனமும், மதச்சண்டையும், முதுகில் குத்துதலும் எல்லா காலங்களிலும் மனிதன் இயல்புகள்”

என்று சொல்லி இருக்கிறார். பெண்ணடிமைத்தனம் இல்லாத புத்தகம் தான் படிப்பேன் என்றால் பெண்களால் புத்தகமே படிக்க முடியாது. அதனால் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது.

நான் பல வருடமாக படிக்கவேண்டும் என்று எண்ணிய புத்தகம் உடையார். ராஜ ராஜ சோழன் எப்படி தஞ்சை பெரிய கோவிலை கட்டினார் என்ற கதையை பலமுறை என் அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். நான் கற்பனை செய்த அளவு இந்த புத்தகம் இல்லை. இருந்தாலும் முதல் பாகத்தை வைத்து மட்டும் எடை போட முடியாது. அடுத்தடுத்த பாகங்கள் படிக்கும் பொழுது பார்ப்போம்.

பொன்னியின் செல்வன் படித்த பிறகு உடையாரை அதோடு ஒப்பிட்டு பார்க்காமல் படிப்பது கடினம்.

கல்கியின் கதாநாயகிகளும் நாயகர்களும் ஆற்றல் மிக்கவர்கள், அறிவாளிகள், சரி என்ன தவறு என்ன தெரிந்தவர்கள், நேர் வழியில் நடப்பவர்கள், தியாக மனப்பான்மை மிக்கவர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயல்பான மனிதர்கள்அல்ல. ஆனால், அதே கதாபாத்திரங்களை பல படிகள் கீழ் இறக்கி நம்மை சுற்றி வாழும் மனிதர்கள் போலவே ஆக்கி இருக்கிறார் பாலகுமாரன்.

இந்த இரு எழுத்தாளர்களின் நேர் மாறான அணுகுமுறை மிகத்தெளிவாக தெரியும் காட்சி ஆதித்த கரிகாலனின் கொலை காட்சி. கல்கியின் romanticism-உம் பாலகுமாரனின் realism-உம் முட்டி மோதிக் கொள்ளும். ஆனால் எனக்கு இரண்டு புத்தகங்களிலும் பிடித்தமான காட்சி அதுதான். அது மட்டும் அல்லாமல், அக்காட்சி Game of thrones-இல் வரும் Renly Baratheon கொலை போன்று இருந்ததால் குதூகலம் அடைந்தேன்.

பொன்னியின் செல்வனின் முதல் புத்தகத்தின் முடிவில் அருண்மொழிவர்மனை சந்திக்க எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் இந்த புத்தகத்தின் முடிவில் அவருடைய மகனை சந்திக்கும் ஆர்வம் அதிகமுள்ளது. “இது அவசியம்தானா?” என்று கோவிலைப்பற்றி ராஜேந்திரன் ஓலை அனுப்பியதிலிருந்தே அந்த ஆர்வம் பெருகியது. நான் கற்பனை செய்தது போல இருப்பாரா? பார்க்கலாம்.

Buy the Kindle edition | Buy the paperback version | View all my reviews

Leave a Reply

%d bloggers like this: