Sila Nerangalil Sila Manidhargal – A Review

சில நேரங்களில் சில மனிதர்கள் [Sila Nerangalil Sila Manithargal] by Jayakanthan
My rating: 4 of 5 stars

சில நாவல்களின் பின் பக்கம் இருக்கிற கதைச் சுருக்கம் படிக்கும்போது, இப்படி ஒரு கதையை எப்படி எழுதினார்கள், என்ன மாதிரி கதாபாத்திரங்களின் மூலம் இந்தக் கதையை சொல்ல முடியும் என்று ஒரு curiosity வரும். அதற்காக மட்டுமே வாங்கிப் படிப்பேன். இந்த புத்தகத்தின் மேல் அப்படி ஒரு curiosity வந்தது இந்தக் கதையை என்னுடைய அம்மா என்னிடம் சொன்னபோது, பல வருடங்களுக்கு முன்னால்.

1972-வில் இவ்வளவு முற்போக்கான நாவலா என்று ஆச்சரியப்பட்டேன். அனால் “முற்போக்கு” என்பது இங்கே தவரான வார்த்தை. ஏனென்றால் இப்போது அந்த நாவல் வெளி வந்திருந்தால் அது தடை செய்யப் பட்டிருக்கும்.

Rape is a sensitive subject. அதிலும் இக்கதையில் rapist-உம் victim-உம் நண்பர்கள் ஆகிறார்கள் (stockholm syndrome?). அதைத் தவறாகக் கையாளுவது தன்னைத் தானே குழி தோண்டிப் புதைப்பதுபோல். இவ்வளவு இக்கட்டான ஒரு நட்பை கூட நம்ப முடியும் வகையில் ஜெயகாந்தன் சித்தரித்துள்ளார்.

இதில் வரும் எந்த கதாப்பத்திரத்தையும் நல்லவர் கேட்டவர் என்று பிரித்து சொல்ல முடியவில்லை. உதாரணமாக, கங்காவின் மாமா எவ்வளவு வக்கிர புத்தி கொண்டவராக இருந்தாலும், வீட்டிலிருந்து துரத்தி விடப்பட்ட கங்காவுக்கு அடைக்கலமும் கொடுத்து படிக்கவும் வைக்கிறார். அதே சமயத்தில், தன் மகளுக்காகவே வாழ்கிறேன் என்று நினைக்கும் கங்காவின் அம்மாவினால் அவளது வாழ்க்கையே அழிக்கப் படுகிறது. “ஒரு மெலிசான கோடு. கோடுக்கு இந்த பக்கம் இருந்தா நா நல்லவன். அந்த பக்கம் போய்ட்டா ரொம்ப கேட்டவன்” என்று punch-dialog மட்டும் சொல்லாமல், அதற்கேற்ற கதையை எழுதியிருக்கிறார். இதன் climax படிக்கும்போது அந்த கோடு கூட இல்லையோ என்று தோன்றுகிறது.

சந்தர்ப்ப சூழ்நிலையால் மட்டுமே வாழ்க்கையின் பாதை மாறிவிடும் என்றும், நாம் செய்யும் எல்லா காரியங்களுக்கும் நாமே பொறுப்பு என்று நினைப்பது எவ்வளவு naive என்றும் இந்தக் கதை காட்டுகிறது. அதற்கு “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்பது மிகவும் பொருத்தமான தலைப்பு.

Buy the book | View all my reviews

One thought on “Sila Nerangalil Sila Manidhargal – A Review

Leave a Reply

%d bloggers like this: